ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி குறிப்பிட்ட சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரத்தில் தேர்தல் முன் விரோதம் காரணமாக இரு வேறு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட 7 பேர் காயமடைந்தனர்.
இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.