சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விடுமுறை தினத்தையொட்டி மீன் வாங்க கூட்டம் அலைமோதியது.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த வாரம் முதல் மீன்பிடி தடைக்காலம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால், வரத்து குறைவின் காரணமாக மீன்களின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விடுமுறை தினத்தையொட்டி அதிகளவில் குவிந்த மீன்பிரியர்கள், சிறிய வகை மீன்களான மத்தி, சங்கரா உள்ளிட்டவற்றையே அதிக விலைக்கு வாங்கி சென்றனர்.