ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் வெயில் காரணமாக பில்வாரா, பீம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக குடிநீருக்காக பல கிலோ மீட்டர் நடந்தே செல்லும் நிலை உள்ளது.