புதுச்சேரியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி சாரம் வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்த மூதாட்டி உண்ணாமலை, கடந்த டிசம்பர் 12-ம் தேதி மடுகரை பகுதிக்கு செல்ல தனியார் பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர், மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த டீயை கொடுத்து 7 சவரன் தங்க தாலி செயின், 3 சவரன் தங்க வளையல் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உருளையன்பேட்டை போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பழனியை சேர்ந்த பிரபல திருடனான கவட்டை ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.