சென்னை, மாதவரத்தில் குடி போதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர்கள் புஷ்பராஜ் – ஜான்சி தம்பதி. கணவரை இழந்த ஜான்சியின் தாயார் வசந்தியும், இத்தம்பதியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த புஷ்பராஜ், மாமியார் வசந்தியிடம் வீண் தகராறில் ஈடுபட்டு கட்டையால் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த வசந்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து புஷ்பராஜை மாதவரம் போலீசார் கைது செய்தனர்.