திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இரு பெண் காவலர்களுக்கு, சக காவலர்கள் சார்பில் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனியில் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் பெண் காவலர் பிரியா மேரி ஆகிய இருவரும் கர்ப்பமாக உள்ளனர்.
இந்நிலையில் அங்கு பணிபுரியும் சக காவலர்கள் சார்பில், இருவருக்கும் மகளிர் காவல் நிலையத்திலேயே பழங்கள் மற்றும் சீர்வரிசை வைத்து, வளையல் அணிவித்து, 5 வகையான சாப்பாடு செய்து வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.