உலகளவில் இந்தியாவின் சக்தி மற்றும் பொருளாதாரம் அதிகரித்து வருவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜீலிங் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
இந்தியாவின் சக்தி அதிகரித்து உலகளவில் கௌரவமும் அதிகரித்து வருவதாகவும் கூறியுள்ளார். நமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவதாகவும், இதனால் பாகிஸ்தானில் உள்ள சகோதர, சகோதரிகள் தாங்களாகவே இந்தியாவுடன் வருமாறு கோருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.