அனைத்து வயதினரும் மருத்துவக் காப்பீட்டை எடுக்கலாம் என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளாது.
நாட்டில் மருத்துவ காப்பீடுகளை எடுப்பதற்கான வயது 65- ஆக இருந்து வந்தது. இந்த வயது வரம்பை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நீக்குவதாக அறிவித்துள்ளது.
மேலும் மூத்த குடிமக்களுக்கும், புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பிரத்யேக திட்டங்களை செயல்படுத்துமாறும் மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்களை ஐ.ஆர்.டி.ஏ.ஐ கேட்டுக்கொண்டுள்ளது.