டெல்லியில் உள்ள காஜிபூர் குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டு விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்ததால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
டெல்லி, காஜிபூர் பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு திடீரென தீப்பிடித்து மளமளவென கிடங்கு முழுவதும் பரவியது.
இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனையறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த பயங்கர தீவிபத்தின் காரணமாக விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் கடும் அவதியடைந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.