வளர்ச்சிக்கான அரசியலை மக்கள் விரும்புகின்றனர் என கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுர தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது குன்னத்துகால், பாறசாலை, அமரவிளை உதயங்குளம் கரை போன்ற பகுதிகளில் அவர் மக்கள் யாத்திரையும் மேற்கொண்டார்.
இதையடுத்து பேசிய பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர், ராகுல் காந்தி கேரள முதல்வரை திட்டுவதும், கேரள முதல்வர் ராகுலை திட்டுவதும் நாடகம் எனவும், வளர்ச்சிக்கான அரசியலையே மக்கள் விரும்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.