கிருஷ்ணகிரி அருகே நிலப்பிரச்சனை காரணமாக சொந்த சித்தப்பாவை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
சந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னவன் என்பவருக்கும் இவரது உறவினரான செந்தில் என்பவருக்கும் இடையே ஏற்கனவே நிலப்பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செந்தில், தமது நிலத்தில் வரக்கூடாது எனவும் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டியும் சின்னவன் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த செந்தில், சின்னவன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் செந்திலை போலீசார் கைது செய்தனர்.