இலங்கை, பதுளை மாவாட்டத்தில் கார்பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
பதுளை மாவட்டத்தில் உள்ள கார் பந்தய திடலில் கார் பந்தயப் போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது அதிவேகமாக வந்த கார் ஓடுபாதையை விட்டு விலகி பார்வையாளர்கள் இருக்கையை நோக்கி பாய்ந்தது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 21 பேர் மீட்க்கப்பட்டு பண்டாரவளை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.