திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் சுவாமி திருக்கோவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த கோவிலில், சித்திரை திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில் இருந்து சிவபெருமான் மற்றும் அம்பாள் புறப்பட்டு நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
சுவாமி மற்றும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.