தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
விளாத்திக்குளத்தில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு நாட்களும் சிறப்பூப் பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதையடுத்து சுவாமி அம்பாள் எழுந்தருளிய திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நகரின் முக்கிய வீதிகளில் சென்ற இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.