பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி , 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 19 புள்ளி 1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது.