விழுப்புரத்தில் திருநங்கைகளுக்காக நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகி போட்டியில் ஏராளமானோர் விதவிதமான ஆடைகளை அணிந்து பார்வையாளர்களை அசத்தினர்.
கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தாண்டு திருவிழாவை ஒட்டி திருநங்கைகளை ஊக்கு விக்கும் விதமாக அழகிப் போட்டி நடைபெற்றது.
இதில் திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்று தங்களது தனித்திறைமைகளை வெளிபடுத்தினர்.
சென்னையை சேர்ந்த ஷாம்சி என்பவர் மிஸ் திருநங்கை பட்டம் வென்று அசத்தினார்.