பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக் பகுதியில் உள்ள லே தோய்ஸ் விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அப்போது, சியாச்சின் ஆயுதப் படை வீரர்கள் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு அவர் பாதுகாப்பு அம்சம் குறித்து ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, எதிரிகளிடம் இருந்து நாட்டைப் பாதுகாத்து வரும் வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.