காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெங்களூருவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்.
பாஜக ஆட்சியில் கர்நாடகாவில் உபரியாக இருந்த வருவாய், தற்போது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.