தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு செல்லும் வழியில், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பசுவுக்கு உணவு அளித்தார்.
மத்திய தகவல் ஒளிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜலந்தரில் இருந்து டெஹ்ரா மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு சென்றார்.
அப்போது அவர் வழியில் பசு ஒன்றை கண்டார். உடனே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, அந்த பசுவுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகளை கொடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.