2023 – 24ம் நிதியாண்டில் மத்திய அரசின் நேரடி வரி வசூல் 19 புள்ளி 58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2023 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் 18 புள்ளி 23 லட்சம் கோடி நேரடி வரி வசூலிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.
இந்நிலையில் தற்போது பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட 1 புள்ளி 35 லட்சம் கோடி கூடுதலாக வரி வசூலாகியுள்ளதாகவும், இலக்கைவிட 7புள்ளி 40 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.