அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செந்துறை, ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடம் சென்ற வட்டார வளர்ச்சி அலுவலர் நடத்திய பேச்சு வார்த்தையின் பேரில், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.