சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்!
Aug 19, 2025, 04:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்!

Web Desk by Web Desk
Apr 22, 2024, 01:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செஸ் உலகின் ஜாம்பவான்களை வீழ்த்தி, உலக கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று, உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடருக்கு தகுதி பெற்றுள்ளார் தமிழக வீரர் குகேஷ். யார் இந்த குகேஷ்..? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

சதுரங்க உலகில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் எப்போதுமே குறைந்ததில்லை… 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, தமிழகத்தில் இன்னொரு விஸ்வநாதன் ஆனந்த் உருவாக குறைந்தது 30 வருடங்களாவது தேவைப்படும் என எண்ணிய நிலையில், இளம் வீரர்களின் அடுத்து பிளாக் பஸ்டர்கள் புது புது சரித்திரங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன.

ஆந்திர மாநிலத்தில் பிறந்த இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், தமிழ்நாட்டில் சதுரங்க விளையாட்டில் மாவீரனாக இருந்து வருகிறார்.

கனடாவில் நடைபெற்ற, செஸ் ஜாம்பவான்களின் கேமான உலக கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், தமிழ்நாடு வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று, மிகக் குறைந்த வயதில் கேண்டிடேட்ஸ் வெல்லும் இளம் வீரர் என்ற சரித்திர சாதனையை தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற FIDE உலகக் கோப்பை தொடரில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியை தழுவி வெளியேறினார் குகேஷ்.

அதன் பின்னர் தமது கடின முயற்சியால் அடுத்தடுத்து போட்டிகளை சந்தித்தது மட்டுமல்லாமல், 37 வருடங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக இருந்து வந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி, முதலிடம் பிடித்தார் குகேஷ்.

தனது 17 ஆவது வயதிலேயே உலகின் டாப் 10 வீரர்கள் பட்டியலுக்கு முன்னேறிய குகேஷ், உலக செஸ் அரங்கில் டாப் 10 இடத்துக்கு முன்னேறும் இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். சென்னையில் உள்ள வேலம்மாள் பள்ளியில் கல்வி பயின்று வரும் குகேஷ், குறைந்த வயதிலேயே இத்தகைய சாதனைகளை படைத்தது எப்படி?.

2015 ஆம் ஆண்டு தனது 9 வயதில், ஆசிய பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்றுள்ளார். 12 வது வயதில் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப், 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தனிநபர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ், ஆசிய யூத் சாம்பியன்ஷிப், டீம் ரேபிட் மற்றும் பிளிட்ஸ், தனிநபர் கிளாசிக் என 5 பதக்கங்களை வென்றுள்ளார்.

12 வயதிலேயே இளம் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த குகேஷ், 2021-ல் ஜூலியஸ் பேர், கெல்பாண்ட் சேலஞ்ச் உள்ளிட்டவைகளை கைப்பற்றினார். 2022-ல் தமிழகத்தில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, இந்திய அணி மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வெல்வதற்கு முக்கிய திருப்புமுனையாக இருந்தவர்.

ஏம் செஸ் Rapid முறை போட்டியில், உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி, இளம் வயதிலேயே கார்ல்சனை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் குகேஷ்.

அடுத்தடுத்து 2023-ல் பிடே ரேட்டிங் புள்ளிகளில் 2,750 மதிப்பீட்டை பெற்ற இளம் வீரர் மற்றும் உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்ற இளம் வீரர் உள்ளிட்ட சாதனைகளை தனது 17 வது வயதிலேயே அசாத்தியமாக புரிந்தவர் இந்த இளம் கிராண்ட் மாஸ்டர்.

சதுரங்க உலகில் ஒருபுறம் பிரக்ஞானந்தா, மறு புறம் குகேஷ் என இருந்தாலும், இருவரும் தமிழ்நாட்டு வீரர்களே ஆவர்.. ஆனால் உலக செஸ் அரங்கில் இருவரும் மின்னல் முரளிகள் என்றே சொல்லலாம்… பிரக்ஞானந்தா கடந்த உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்று உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றார்.

ஆனால் குகேஷ் காலிறுதியில் மேக்னஸ் கார்ல்சன் இடம் தோல்வியுற்று, உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கான வாய்ப்பை நழுவ விட்டாலும், தனது தொடர் முயற்சியால் அடுத்தடுத்து சர்வதேச செஸ் தொடர்களில் கில்லியாக விளையாடி உலக கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெற்றார்.

கேண்டிடேட்ஸ் தொடரில் குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி என மூன்று தமிழ்நாடு போட்டியாளர்கள் களம் கண்ட நிலையில், குகேஷ் தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டி ஒரு சுற்றில் மட்டுமே தோல்வி அடைந்து 9 புள்ளிகள் எடுத்து முதல் இடம் பிடித்தார்.

14 சுற்றுகள் முடிவில் முதல் இடத்தில் இருந்த குகேஷ் உலக கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

பொதுவாகவே உலக கேண்டிடேட்ஸ் சாம்பியன் பட்டம் வென்ற போட்டியாளர், நடப்பு உலக சாம்பியன் உடன் புதிய உலக சாம்பியன் பட்டத்திற்காக போட்டியிடுவார்.

அதன்படி குகேஷ் இந்த ஆண்டு உலக சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரென் உடன் களம் கான உள்ளார்.

செஸ் உலகின் ஒட்டுமொத்த பார்வையும் தற்போது குகேஷ் பக்கம் தான் திரும்பியிருக்கிறது… தனக்கு 11 வயது இருக்கும் பொழுது குகேஷ் இடம் ஒரு நிருபர், உங்களின் இலக்கு என்ன என கேட்ட போது, தான் இளம் வயதிலேயே உலக சாம்பியன் ஆக வேண்டும் என அவர் சொல்லியிருப்பார்.

ஆம் நடப்பு உலக சாம்பியன் டிங் லிரேனை வீழ்த்தி குகேஷ் உலக சாம்பியன் பட்டம் வென்றால், இளம் வயதில் உலக சாம்பியன் பட்டம் வென்ற வீரர் என்ற உலக சாதனையையும் அவர் படைக்ககூடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

Tags: Tamil Nadu player Gukesh won the champion title!
ShareTweetSendShare
Previous Post

கல்லூரி மாணவி கொலை!- லவ் ஜிகாத் காரணமா?

Next Post

30 கிலோ கஞ்சா பறிமுதல்! – ஒருவர் கைது!

Related News

டிரம்பின் வரிகள் அமெரிக்காவை தனிமைப்படுத்தும் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடும் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் சீனா : அமெரிக்காவுக்கு தாவும் முதலீட்டாளர்களால் அதிர்ச்சி!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

FORBES-ன் அமெரிக்க வாழ் இந்திய பில்லியனர்ஸ் பட்டியல் : 12 பில்லியனர்களுடன் இந்தியா முதலிடம்…!

Load More

அண்மைச் செய்திகள்

புதினின் “மலக் கழிவுகள்” சேகரிக்க பிரத்தியேக சூட்கேஸ் : காரணம் என்ன தெரியுமா?

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies