தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஓடக்கரை கடற்கரையில் தூத்துக்குடி மாவட்ட கியூபிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 80 மூட்டை பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய படகை பறிமுதல் செய்த போலீசார், அந்தோணி துறை என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.