அயோத்தியில் உள்ள ராமர் கோயில் பிரான்பிரதிஷ்டை பிறகு, இது வரை தோராயமாக ஒன்றரை கோடி பேர் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ராமபிராமனை தரிசித்துள்ளதாக ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
செய்தியாளரிடம் பேசிய ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா பொதுச்செயலாளர் சம்பத் ராய்,
கடந்த ஜனவரி 22 ல் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்த கொண்டிருக்கிறார்கள்.
கோயில் கீழ்தளம் கட்டுமான பணி முழு அளவில் முடிந்துள்ளது. முதல் தளம் விடுபட்ட கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.
கோயிலை சுற்றி 14 அடி உயரத்தில் காம்பவுண்டு சுவர் கட்டி முடிக்கப்படும். கோயில் வளாகத்தில் 600 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
இதனை உள்ளூர் மக்களே அவரவர் அக்கறை எடுத்து தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை ஒன்றரை கோடிபேர் தரிசனம் செய்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.