கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் இருந்த தீவிரவாதிகளை பிரதமர் மோடி முற்றிலுமாக ஒழித்துவிட்டார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றியனார்.
அப்போது உரையாற்றிய அமித்ஷா,
நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றிலுமாக பிரதமர் மோடி ஒழித்துவிட்டார் என தெரிவித்தார். சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியின் போது நக்சல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தீவிரவாதிகளின் தாக்குதல்கள் குறைந்துள்ளதாகவும், விரைவில் நக்சலைட் தாக்குதல் முடிவுக்கு வரும் என காட்டமாக தெரிவித்தார்.
மேலும் சத்தீஸ்கரில் மக்கள் நலனுக்கு காங்கரஸ் என்ன செய்தது என்று ராகுலிடம் கேள்வி எழுப்ப விரும்புவதாக தெரிவித்தார்.