சிவகங்கையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தலைமையாசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், பெரியநரிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு முருகன் என்பவர் தலைமையாசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் அதே பள்ளியில் பயின்று வந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கு, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தலைமையாசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 69 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் அதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு தரப்பில் 29 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கவும் உத்தரவிட்டார்.