தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் தனியார் நூற்பாலை ஊழியர்களுக்கு, தீயணைப்புத் துறையினர் முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளித்தனர்.
தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில், ஏப்ரல் 14 முதல் 20-ம் தேதிவரை தீ தொண்டு நாள் வார விழா கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு ஆலங்குளம் சுற்று வட்டாரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில், தனியார் நூற்பாலை ஊழியர்களுக்கு தீ விபத்தை தடுப்பது மற்றும் முதலுதவி சிகிச்சை வழங்குவது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.