கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மஹாதேவர் மற்றும் கிருஷ்ணசுவாமி கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
குழித்துறை திற்பிலங்காடு காளைவிழுந்தான் ஸ்ரீ மஹாதேவர், கிருஷ்ண சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு யாக குண்டத்தில் பூஜிக்கப்பட்ட ஆயிரத்து எட்டு கலசங்களை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆதீனங்கள், ஆன்மீக பெரியவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.