இலங்கையில் இருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர். அவர்களை கடலோர பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புடன் மண்டபம் முகாமிற்கு அழைத்து சென்றனர்.
இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்து இறங்கியவர்கள் குறித்து தகவல் அறிந்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில், மட்டக் களப்பு பகுதியை சேர்ந்த கஜேந்திரன், அவரது மகன் சஜித்மேனன், சிவனேசுவரன் என தெரியவந்தது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு காரணமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, மண்டபம் முகாமிலில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் அவர்கள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர்.