இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பத அளவுகள் குறித்த முன்னறிவிப்புகளை வழங்குகிறோம் என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கலந்து கொண்டார்.
கூட்டத்துக்குப் பின்னர் பேசிய மிருத்யுஞ்சய் மொஹபத்ரா,
இந்திய வானிலை ஆய்வு மையமானது வெப்ப அலைகள் மற்றும் ஈரப்பத அளவுகள் குறித்த முன்னறிவிப்புகளை, தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்கி வருகிறது என தெரிவித்தார்.
மேலும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் இடங்கள் குறித்த பருவகால முன்னறிவிப்புகளை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.