தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ’ஹீட் ஸ்ட்ரோக்’எனும் நோயிலிருந்து பொதுமக்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்ள சில குறிப்புகள்!
“ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து தற்காத்துக்கொள்ள அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்”
“தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரையை கலந்து குடிப்பது மிகவும் சிறந்தது”
“பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது உடலுக்கு நல்லது”
“பழச்சாறு, மோர் மற்றும் பால் ஆகியவற்றை அருந்துவது உடலுக்கு சிறந்தது”
“உணவகங்களில் உணவு உட்கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து கொள்ளலாம்”
“இறைச்சி வகைகள், எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட உணவுகளை தவிர்ப்பது சிறந்தது”
“குளிர்சாதன வசதி இல்லாதோர், வீடுகளை காற்றோட்டமாக வைத்துக்கொள்ளலாம்”
“ஜன்னல்களின் மேல் ஈரத்துணிகளை போட்டு மின் விசிறியை இயக்கலாம்”
இவற்றை பின்பற்றினால் ஹீட் ஸ்ட்ரோக் தவிர்கலாம்.