காங்கிரஸ் கட்சி, பகவான் ராமருக்கும், சனாதனத்திற்கும் எதிராக செயல்பட்டு வருகிறது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.
சத்தீஸ்கர் மாநிலம் முங்கோலியில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரமாண்டமான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய நட்டா, ஸ்ரீராமர் கோவில் மற்றும் சேது சமுத்திரம் உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸ் நேர்மையை கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் கட்சி, பகவான் ராமருக்கும், சனாதனத்திற்கும் எதிராக செயல்பட்டு வருகிறது எனக் குற்றம் சாட்டினார்.