திருப்பதி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வரப்பிரசாத் ராவ் இன்று தன்னுடைய வேட்பு மனுவை திருப்பதியில் தாக்கல் செய்தார். இவருடன் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் இருந்தார்.
வேட்புமனு தாக்களுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன்,
தேசிய அளவில் பாரதிய ஜனதா கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள வெற்றியாக அமைந்துள்ளது. அதேபோல் திருப்பதியிலும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வரப்பிரசாத் ராவ் உறுதியாக வெற்றி பெறுவார் என்று கூறினார்.
மேலும் ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவரான ராகுல் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி கூறியது சரி கிடையாது.
வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருந்த நடுநிலை வாக்காளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவு வாக்காளர்கள் ஆகியோரின் பெயர்களை தமிழகத்தில் நீக்கியது ஜனநாயக படுகொலை என்று தெரிவித்தார்.