தெலுங்கானா சூர்யா பேட்டையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரிக்கு பின்னால் கார் புகுந்து விபத்துக்குள்ளானது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டம் முகுந்தாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி பின்னால், வேகமாக வந்த கார் லாரியின் அடியில் புகுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், லாரியினுள் புகுந்த காரை மீட்டனர்.
காருக்குள் இருந்த உடல்களை பிரேத பரிசோதனைக்காக சூர்யா பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் முழு விவரம் தெரியவில்லை. இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதைபதைக்கச் செய்துள்ளது.