செங்கல்பட்டில் ட்ரோன் மூலம் அவசர சிகிச்சை மருந்து விநியோகம் செய்யும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் மத்திய தொழுநோய் பயிற்சி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது. இதன் சார்பில், மாவட்டத்தில் உள்ள இதர தொழுநோய் மருத்துவமனைகளுக்கு அவசர சிகிச்சைக்கான மருந்துகள் ட்ரோன் மூலம் எடுத்து செல்லும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பரனூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள தொழுநோயாளிகளுக்கு மருந்துகள் அனுப்பவும், இரத்த மாரிதிகளை எடுத்து வரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் கால நேரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.