2024 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். தமிழகத்தைச் சேர்ந்த பத்மா சுப்ரமணியனுக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் இன்று 2024 பத்ம விருதுகளுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், சமூக சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற அனைத்து துறைகளில் தனித்துவமான மற்றும் சிறப்பான/ சாதனைகள் / சேவைகளுக்காக மத்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ ,பத்ம பூஷன், பத்ம விபூஷன், ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது.
அதன்படி 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் விஜயகாந்த், மற்றும் 5 பேர்களுக்கும் 2024 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது.
விருதுக்கு தேர்வு பெற்றவர்களுக்கு ராஷ்டிரபதி மாளிகையில் இன்று நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் சிரஞ்சீவி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்ளிட்டோரும் பத்ம விருது பெற்றனர்.
பத்ம விபூஷண் விருது 5 பேருக்கும், பத்ம பூஷண் விருது 17 பேருக்கும், பத்மஸ்ரீ விருது 110 பேருக்கும் அறிவிக்கப்பட்டிருந்தன.
அதில், தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, பாடகி உஷா உதுப், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா, ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, கல்வி மற்றும் இலக்கியப் பிரிவில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ், சேஷம்பட்டி டி சிவலிங்கம், இந்தியாவின் முதல் யானை பெண் பராமரிப்பாளர் பார்வதி பருவா, வன சூற்றுச்சூழல் ஆர்வலர் சாய்மி முர்மு, மிஸோரமின் சமூக ஆர்வலர் சங்தாங்கிமா, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் பிரேமா தன்ராஜ், தெற்கு அந்தமானில் இயற்கை விவசாயம் செய்து வரும் செல்லம்மாள், 650-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளைப் பாதுகாத்து வரும் காசர்கோட்டைச் சேர்ந்த விவசாயி சத்யநாராயண பெலேரி, சர்வதேச மல்லர்கம்பம் பயிற்சியாளர் உதய் விஸ்வநாத் தேஷ்பாண்டே என 110 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது.