கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதாக கூறி 11-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோடிமுனை மீனவ கிராமத்தை சேர்ந்த விஜின் என்பவர், 11-ம் வகுப்பு மாணவி ஒருவரை இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதாக கூறி ஆலஞ்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வாடகை வீட்டில் ஒன்றாக குடும்பம் நடத்துவோம் என கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவியை மீட்ட போலீசார், விஜினை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.