கோயம்பேடு காய்கறி சந்தையில் கார்பனைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்களை, உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோடை காலம் தொடங்கியதையடுத்து மாம்பழ சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து விற்பனைக்காக நச்சுப் பொருட்களால் மாம்பழங்களை பழுக்க வைப்பதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காலை 4 மணி முதல் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் குமார் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
இதுவரை நான்கு டன் கார்பனைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனவும், பறிமுதல் செய்யப்பட்ட ஒவ்வொரு கடைகள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், கார்பனைட் கற்களைக் கொண்டு பழுக்க வைக்கும் தவறை வியாபாரிகள் மீண்டும் மீண்டும் செய்வதாகவும், பொதுமக்கள் கவனத்துடன் பழங்களை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.