ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் நிறுவன லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
ஊத்துக்குளியில் செயல்பட்டு வரும் எஸ்.கே.எம் தனியார் நிறுவனத்தின் லாரி ஒன்று, வந்துக்கொண்டிருந்தது அப்போது எதிரே வந்த பிரபு என்பவர் மீது லாரி மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து முறையான சாலை தடுப்புகள் இல்லை எனக்கூறி, ஏராளமான பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.