அமெரிக்காவில் கடந்த 2022-ம் ஆண்டு 66 ஆயிரம் இந்தியர்கள் அந்நாட்டு குடியுரிமையை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2022-ம் நிதியாண்டில் சுமார் 10 லட்சம் பேர் அமெரிக்க குடிமக்களாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேருடன் மெக்ஸிகோ முதலிடத்தையும், சுமார் 66 ஆயிரம் பேருடன் இந்தியா இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளது.