தமிழகத்தில் இன்று 15 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F வெப்பமானது பதிவாகி உள்ளது. அதேபோல் சென்னை மீனம்பாக்கம் 100.94°F, கோயம்பத்தூர் 102.56°F, தர்மபுரி 105.8°F, ஈரோடு 107.6°F, கரூர் பரமத்தி 106.7°F, மதுரை நகரம் 105.8°F, மதுரை விமான நிலையம் 103.82°F, நாமக்கல் 104.9°F, தஞ்சாவூர் 102.2°F, திருப்பத்தூர் 106.88°F, திருச்சிராப்பள்ளி 104.18°F, திருத்தணி 103.64°F, வேலூர் 106.7°F, பாளையங்கோட்டை 102.2°F வெப்பமானது பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 9 மணி வரை கன்னியாகுமரி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.