ஜம்மு காஷ்மீரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ரஜோரி மாவட்டம் குண்டா டாப் கிராமத்தில் நேற்று மாலை மர்ம நபர்களால் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், குண்டா டாப் கிராம சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.