தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
சங்கரலிங்கபுரம் பகுதியில் இயங்கி வரும் தீப்பெட்டி தொழிற்சாலையில், உயர் மின்னழுத்தம் காரணமாக, தீக்குச்சி தயாரிக்கும் இயந்திரம் திடீரென தீப்பிடித்தது.
இந்த விபத்தில் மெழுகு பேரல்கள், தீக்குச்சிகள் மற்றும் இயந்திரங்கள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தன.
அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.