திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருட்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் எளிதாக கிடைக்கிறது எனத் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
The access to drugs in TN under the DMK Govt is becoming easier like never before as peddlers are given plum posts in DMK, making law enforcement a joke.
This incident in Madurai where an innocent biker gets attacked is 4th such incident in TN in the last few days reported as… pic.twitter.com/LTR8RSxDj4
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 23, 2024
திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருட்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் எளிதாக கிடைக்கிறது. போதைப் பொருள் வியாபாரிகளுக்கு திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கஞ்சா போதையில் தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதாக கூறிய அவர், மதுரையில் இருசக்கர வாகன ஓட்டி தாக்கப்பட்டதையும் சுட்டிகாட்டியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து நிஜ உலகிற்கு எப்போது திரும்புவார் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.