உலக புவி தினத்தை முன்னிட்டு, காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் பல் மருத்துவமனை மற்றும் தனியார் வேளாண் கல்லூரி சார்பில், பிளாஸ்டிக் பொருள்களை அகற்றும் பணி நடைப்பெற்றது.
இதில், வேளாண் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் பங்கேற்று, சாலையில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினர்.
பின்னர், மண்வளம் காப்போம், பிளாஸ்டிக் ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்வு மூலம், 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.