கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுவதன் எதிரொலியாக, நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதால், நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தளிகையில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் உமா, கோழிகளுக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.