தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என பலரும் பேருந்தில் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் கூட்டம் அதிகமாகி, நெரிசல் காரணமாக படிக்கட்டில் பயணம் மேற்கொள்வதாகவும், இதனால் உயிரழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன் அடிப்படையில் மதுரை கிளை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை மேற்கொண்டது. அதில், தமிழகத்தில் உள்ள எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படாமல் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இதுகுறித்து விரிவான விவரங்களுடன் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.