பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டியும், சரணடைவதில் இருந்து விலக்கு கோரியும் முன்னாள் டிஜிபி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இதையடுத்து நீதிபதிகள், ”அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டிய போலீசார், நாட்டின் பிற குடிமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஒழுக்கக்குறைவுடன் உடன் பணியாற்றும் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார்.
உயர் பதவி வகித்த ராஜேஷ் தாஸ், தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார் என்பது வேதனை அளிக்கிறது. உடனடியாக அவர் போலீசார் முன்பு சரணடைய வேண்டும்” என உத்தரவிட்டனர்.