மதுரை சித்திரைத் திருவிழாவில் காவல்துறைக்கு சொந்தமான ட்ரோன் கேமராவை பிடிக்க முற்பட்ட இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை கொடுத்தனர்.
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.
கும்பலை கட்டுப்படுத்தவும், அசம்பாவித சம்பவம் ஏற்படாத வண்ணமும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக, ட்ரோன் கேமரா மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் ட்ரோன் கேமராவை பிடிக்க முயன்றனர்.
இதனைக் கண்ட போலீசார், குறும்புக்கார இளைஞர்கள் ஐந்து பேரை பிடித்து, தவளை மாதிரி தவழ்ந்து செல்லுமாறு கூறி நூதன தண்டனை வழங்கினர்.
















