ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய நாடுகள் பட்டியல்!
Mar 15, 2026, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கிய நாடுகள் பட்டியல்!

Murugesan M by Murugesan M
Apr 24, 2024, 07:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணுவத்துக்கு அதிகம் நிதி ஒதுக்கிய நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது ? என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த 2023ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவு செய்த உலக நாடுகளின் பட்டியலை ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த பட்டியலில் 916 பில்லியன் டாலர்களை செலவிட்டு அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. சீனா 296 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டு இரண்டாம் இடத்திலும், – 109 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட்டு ரஷ்யா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

ராணுவத்திற்காக 84 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ள இந்தியா, இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சவுதி சவுதி அரேபியா , இங்கிலாந்து முறையே ஐந்து மற்றும் ஆறாம் இடத்தை பெற்றுள்ளன.

ராணுவத்திற்கு அதிகம் செலவு செய்த நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஜெர்மனி, உக்ரைன், பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவுடன் பாகிஸ்தான் 30-வது இடத்தில் இருக்கிறது

இந்தியா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4.2% அதிகம் செலவளித்துள்ளது என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2022ஆம் ஆண்டிலும் இராணுவத்துக்காக செலவு செய்வதில் இந்தியா நான்காவது பெரிய நாடாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டு இந்தியாவின் ராணுவச் செலவு 81.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, அதுவும் அதற்கு முந்தைய ஆண்டில் , 2021 ஆண்டில் இருந்ததை விட இருந்ததை விட 6% அதிகம் . ராணுவத் துறைக்கு இந்திய அரசு ஒதுக்கும் நிதி ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது.

இந்தியாவின் எல்லை பகுதியான லடாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட போர் பதற்றத்துக்குப் பின் , நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் , ராணுவத்துறையை மேம்படுத்திடவும் மோடி அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

அதன் ஒரு பகுதியாக, ராணுவத்துக்கு அதிநவீன தளவாடங்கள் , போர் விமானங்கள் , பீரங்கிகள் வாங்குவதற்கும், மேலும் இராணுவ உள்கட்டமைப்பை வலுபடுத்ததற்கும் முன்னுரிமை கொடுத்தது.

இதன் காரணமாகவே இந்தியாவின் ராணுவச் செலவுகள் அதிகமாகி இருக்கிறது . ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன தகவல்களின் படி சீனா உலகின் இரண்டாவது பெரிய இராணுவச் செலவு உடைய நாடாக உள்ளது .

2023ம் ஆண்டில் சீனா, ராணுவத்துக்காக ஏறத்தாழ 296 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கியுள்ளது, இது 2022 ஆம் ஆண்டை விட 6% அதிகமாகும். 2022 ஆம் ஆண்டில் சீனாவின் இராணுவச் செலவு 292 பில்லியன் டாலர்களாக இருந்தது.

20 லட்சம் வீரர்கள் கொண்ட சீனா ஒரு புறம் தைவான், தெற்கு மற்றும் கிழக்கு சீனக் கடல்பகுதிகளில் அமெரிக்காவின் தலையீட்டை தடுப்பதற்கும், சீனாவின் கடற்படையின் இருப்பை படிப்படியாக அதிகரிக்கவும் இராணுவ பட்ஜெட்டை சீன உயர்த்திக் கொண்டே போகிறது.

சீனாவுக்கு இணையாக அல்லது சீனாவை விட அதிக வலிமை பொருந்திய இராணுவமாக 14 லட்சம் வீரர்களை கொண்டுள்ள இந்தியாவும் இராணுவத்திற்கான நிதியை உயர்த்திக்கொண்டே வருகிறது.

2009 ஆண்டுக்கு பிறகு , இந்த முறை தான், அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா -ஓசியானியா ஆகிய ஐந்து புவியியல் பகுதிகளிலும் இராணுவச் செலவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவன ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது .

ரஷ்யா-உக்ரைன் , இஸ்ரேல் – காசா இரண்டு போர்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது நீடித்தால் பல நாடுகளின் ராணுவச்செலவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: The list of countries that have allocated the most money to the military!
ShareTweetSendShare
Previous Post

மழை பெய்ய வேண்டி சிவாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடு!

Next Post

2-ம் கட்ட தேர்தல் – இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies